×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை! பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த துயரமான தகவல்கள்!

Kerala pregnant elephant postmortem report

Advertisement

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று மிகுந்த பசியால் உணவு தேடி கிராமத்திற்குள் வந்துள்ளது. அப்பொழுது சிலர் அன்னாசி பழத்திற்குள் வெடிபொருட்களை வைத்து கொடுத்துள்ளனர். அதனை கர்ப்பிணியானை சாப்பிட்ட நிலையில் அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் வெடி வெடித்து பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பலத்த காயங்களுடன் மிகுந்த வேதனை அடைந்த அந்த யானை,  கிராமத்தினர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அமைதியாக தண்ணீருக்குள் இறங்கி நின்றது. பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் யானையின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் பழத்தில் வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் யானையின் வாய் பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடுமையான காயங்களால் எரிச்சல் வேதனை தாங்க முடியாமல் யானை தண்ணீருக்குள் இறங்கி குடித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் காயங்கள் சீழ்பிடித்துள்ளது. மேலும் இந்நிலையில் இரண்டு வாரமாக யானை எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளது. பின்னர் பசி, மிகுந்த வலியால் யானை மயங்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. மேலும் வெடி வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டதால்தான் யானைக்கு காயம்ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #elephant #Postmoretem report
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story