×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி செய்யக் கூடாத காரியத்தை கணவனே செய்ய சொன்ன கொடூரம்! அந்தரங்க உறுப்புகளில் தாக்கி கணவன் செய்த சித்திரவதை.. புது பொண்ணுக்கு அடுக்கடுக்காக நேர்ந்த கொடூரம்..!!!

சவுதி அரேபியாவில் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதாக கேரள புதுமணப்பெண் அஞ்சு புகார் அளித்துள்ளார். சாவரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நீண்டகராவைச் சேர்ந்த 24 வயது புதுமணப்பெண் அஞ்சு, சவுதி அரேபியாவில் கணவரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை தொடர்பாக கணவர் நந்து மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னைத் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கேரளா திரும்பிய அஞ்சு தற்போது கொல்லம் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வரதட்சணையை காரணம் காட்டி துன்புறுத்தல்

அஞ்சுவுக்கும் நந்துவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு கொண்டு வந்த வரதட்சணை போதவில்லை எனக் கூறி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரச்சினை செய்ததாக அஞ்சு தெரிவித்துள்ளார். பின்னர் கணவருடன் சவுதி அரேபியா சென்ற நிலையில், அங்கு தன் மீதான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திருமணமான 8 மாதங்களில் ஏரியில் மிதந்த கர்ப்பிணி பெண்ணின் உடல்! 11 நாட்களாக மறைக்கப்பட்ட மர்மம் என்ன? அதிர்ச்சி சம்பவம்..!!!

தகவலின்படி, சவுதியில் இருந்தபோது நந்து பிரஷர் குக்கர், கல் மற்றும் லேப்டாப் சார்ஜர் ஒயர் உள்ளிட்டவற்றால் தன்னைத் தாக்கியதாக அஞ்சு புகாரில் தெரிவித்துள்ளார். பிரஷர் குக்கரால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், வயிறு மற்றும் அந்தரங்க பகுதிகளிலும் தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கத்தியை காட்டி மிரட்டி ஆடியோ பதிவு?

தாக்குதலுடன் மிரட்டலும் நடந்ததாக அஞ்சு கூறியுள்ளார். கத்தியைக் காட்டி அச்சுறுத்திய நந்து, திருமணத்திற்கு முன்பே தனக்கு பலருடன் தொடர்பு இருந்ததாகவும், விவாகரத்துக்குப் பிறகு பாலியல் தொழிலில் ஈடுபடப் போவதாகவும் சொல்லும்படி கட்டாயப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வார்த்தைகளை பேச வைத்து ஆடியோவாக பதிவு செய்ததாகவும் அஞ்சு குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட துன்புறுத்தலுக்குப் பிறகு அஞ்சு கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லம் மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சாவரா போலீசார் வழக்குப் பதிவு

அஞ்சு அளித்த புகாரின் அடிப்படையில் சாவரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு நடந்ததாகக் கூறப்படும் வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் போலீசார் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தபோது வயிறு மற்றும் அந்தரங்க பகுதிகளில் நடந்த தாக்குதல் குறித்த விவரங்கள் முழுமையாக சேர்க்கப்படவில்லை என அஞ்சு குற்றம் சாட்டியுள்ளார். அவரது புகாரில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: திருமணமான சில மாதங்களில் மாமனார் வீட்டில் 22 வயது இளம்பெண் மரணம்! நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#வரதட்சணை கொடுமை #Kerala Woman #saudi arabia #Chavara Police #domestic violence
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story