×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இத செய்ய ஒரு தாய்க்கு எப்படி மனசு வந்துச்சு? பெத்த 2 பிள்ளைகளையும் தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்! விசாரணையில் தாய் சொன்ன அதிரவைக்கும் காரணம்...!!!

கேரளாவில் சுதந்திர வாழ்க்கைக்கு குழந்தைகள் தடையாக இருந்ததாகக் கருதி, இரு பிள்ளைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றதாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கோழிஞ்சம்பாறை மேனன்பாறையில், 5 வயது மகள் மற்றும் 3 வயது மகன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் தவறி விழுந்ததாக முதலில் கூறிய தாய் நிவேத்யா, காவல்துறை விசாரணையில் இருவரையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட இரு குழந்தைகள்

மரவெட்டித் தொழிலாளியான ஜான் குமார், அவரது மனைவி நிவேத்யா ஆகியோர் கோழிஞ்சம்பாறை மேனன்பாறை பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இவர்களது 5 வயது மகள் ஜெனிஃபர் ஜூலியட், 3 வயது மகன் ராபின் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் வீட்டின் குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: உன்ன நம்பி வந்த எனக்கு இப்படி ஒரு நிலைமையா? காதலித்து கல்யாணம் பண்ணிய கணவனின் மெகா மோசடி.... கண்ணீருடன் கதறி அழும் மனைவி..!!!

சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தைகள் விளையாடச் சென்றதாகவும், பின்னர் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும் நிவேத்யா முதலில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், இரு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உறவினர்களின் சந்தேகம் விசாரணைக்கு திருப்பம்

தண்ணீர் தொட்டியின் உயரம் சுமார் 3 அடி மட்டுமே இருந்ததால், குழந்தைகள் தவறி விழுந்திருக்கலாம் என ஆரம்பத்தில் போலீசாரும் கருதியதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரே நேரத்தில் இரு குழந்தைகளும் எப்படி தொட்டிக்குள் விழுந்திருக்க முடியும் என்ற கேள்வியை உறவினர்கள் எழுப்பினர். மேலும், குழந்தைகளுக்கு நீச்சல் தெரியும் என்பதால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அக்கம் பக்கத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நிவேத்யா அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

கிடுக்குப்பிடி விசாரணையில் வெளியானதாக கூறப்படும் உண்மை

மாடலிங் துறையில் ஈடுபட வேண்டும், மேல்படிப்பு படிக்க வேண்டும், குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் நிவேத்யாவுக்கு இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கணவர் ஜான் குமார் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், தனது விருப்பமான வாழ்க்கைக்கு குழந்தைகளே தடையாக இருப்பதாக நிவேத்யா கருதியதாகவும், அதன் காரணமாக இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றதாகவும் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிவேத்யா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாலக்காடு அருகே இரு பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தாய் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: வெடித்த வென்டிலேட்டர்... துடிதுடித்து உயிரிழந்த 3 பச்சிளம் குழந்தைகள்..! எச்சரிக்கை ஒலி அடித்தும் அசந்து தூங்கிய செவிலியர்கள்... சிசிடிவி மூலம் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கேரளா குழந்தைகள் கொலை #Palakkad Crime #தாய் கைது #குழந்தைகள் மரணம் #Kerala Crime News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story