ஒரு நொடி அதை பார்க்காமல் இருந்திருந்தால் உயிரே போயிருக்கும்!! நூலிழையில் தப்பிச்சேன்னு சொல்றது இதுதான் போல!! வைரல் வீடியோ
கேரளாவில் நபர் ஒருவர் நூலையில் உயிர் தப்பும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறத
கேரளாவில் நபர் ஒருவர் நூலையில் உயிர் தப்பும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக கேரளாவில் கன மழை பெய்துவருகிறது. அதேநேரம் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டு, கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது. தொடர் மழை மற்றும் கடல் சீற்றத்தால் கடற்கரை ஓரம் இருந்த சில வீடுகள் நொடி பொழுதில் தரைமட்டமான வீடியோ காட்சிகளும் சமீபத்தில் வைரலானது.
இந்நிலையில் கேரள மாநிலம் வர்கலா பகுதியில் நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது, அங்கிருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மரம் சாய்வதை கவனித்த அந்த நபர் உடனே அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார். இதனால் அவர் பெரிய விபத்தில் இருந்து நொடி பொழுதில் உயிர் தப்பியுள்ளார்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.