×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ.. பச்சிளம் பிஞ்சு போயி.. மனதை கல்லாக்கி தாய் செய்த பரபரப்பு காரியம்..!

ஐயோ.. பச்சிளம் பிஞ்சு போயி.. மனதை கல்லாக்கி தாய் செய்த பரபரப்பு காரியம்..!

Advertisement

தான் பெற்றெடுத்த குழந்தையை தாயே அடித்து கொலை செய்த பகீர் சம்பவம் கோட்டயம் அருகே நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சார்ந்தவர் பென்னி. இவரது மனைவி பிளஸ்சி (வயது 21). தம்பதிகள் இருவரும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரான்னி, பழவங்காடி பகுதியில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பிளஸிக்கு கடந்த 27 நாட்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. கடந்த 8 ஆம் தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று தெரிவிக்கவே, பிரேத பரிசோதனையின் போது குழந்தையின் பின்புற தலையில் அடிபட்டதற்கான காயமும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், "குறைபிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை, பிறந்த நாள் முதலாகவே உடல்நிலை கவலைக்கிடமானாக வகையில் இருந்துள்ளது. மேலும், விடாமல் அழுது தொந்தரவு செய்த காரணத்தால், குழந்தையை நானே அடித்து கொலை செய்தேன்" என பிளஸ்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

குழந்தையின் தாயான பிளஸ்சி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Kottayam #Murder #kill #baby #mother #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story