ஸ்விக்கி மூலம் பிரியாணி விற்பனை செய்யும் சிறைச்சாலை! அலைமோதும் கூட்டம்!
Kerala Jail Ties up With Swiggy to Sell Biryani Made by Inmates

தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்கு போனா கலி தான் சாப்டனுமும் நிறைய படங்கள், நண்பர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கேரளாவில் உள்ள ஜெயில் ஒன்றில் அதில் இருக்கும் கைதிகள் தயார் செய்யும் பிரியாணி கேரளாவில் பிரபலமாகி தற்போது ஸ்விக்கியில் விற்பனை செய்யும் அளவிற்கு பிரபலமாகியுள்ளது.
கேரளாவில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலை கடந்த 2011 ஆம் ஆண்டு முதன் முதலா சிறையில் இருக்கும் கைதிகளை வச்சு சப்பாத்தி சுட்டு அதை வெளியில் வித்துருக்காங்க. சப்பாத்தியின் சுவை மக்களுக்கு மிகவும் பிடித்துப்போக கூட்டம் அலைமோதியுள்ளது.
இதனை அடுத்து பேக்கரி அயிட்டம், அசைவ குழம்பு, பிரியாணி இதெல்லாம் கைதிகள வெச்சே சமைச்சு, ஜெயில் கவுண்டர்ல விக்க ஆரம்பிச்சு இருக்காங்க. ஜெயில் நிர்வாகம் தயாரித்து விற்பனை செய்த அணைத்து தயாரிப்புகளும் படு பிரமாதமாக விற்பனையாகியுள்ளது.
இதனால் ஜெயிலுக்கு பக்கத்தில இருந்த மற்ற எல்ல கடைகளும் வியாபாரம் இல்லாமல் கடையை சாத்திட்டு கிளம்பிட்டாங்க. இப்போ புதுசா பிரியாணி செஞ்சு விக்க ஆரம்பிச்சுருக்காங்க ஜெயில் நிர்வாகம்.
இதுல சூப்பர் மேட்டர் என்னனா கூட்டம் அதிகமானதை அடுத்து பிரபல ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கியுடன் தற்போது கூட்டணி சேர்ந்து உணவுகளை விற்க தொடங்கியுள்ளது ஜெயில் நிர்வாகம்.