துடிதுடித்த கணவன்! கண்டு கொள்ளாமல் இருந்த அரசு மருத்துவமனை! எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க! எனக்கு 2 பிள்ளைங்க இருக்காங்க.. மரண வலியுடன் மூச்சு விட முடியாமல் பிரிந்த தந்தையின் உயிர்! உச்சக்கட்ட கொடூர காட்சி!
கேரளாவில் அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மார்பு வலியுடன் வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை கிளப்பியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விக்குறி எழுந்துள்ளது. கேரளாவில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ அலட்சியத்தின் உச்சமாக சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்பு வலியுடன் மருத்துவமனை வந்த இளைஞர்
திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாகடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் 37 வயது பிஸ்மீர் மார்பு வலியுடன் வந்தார். மூச்சு விட முடியாமல் துடித்த அவர், "எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள், எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்" என உருக்கமாக குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது.
மருத்துவ பணியாளர்களின் கடும் அலட்சியம்
ஆனால் அங்கு இருந்த மருத்துவ ஊழியர்கள் அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையோ, ஆக்சிஜன் உதவியோ வழங்காமல், நாற்காலியில் அமர வைத்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த கொடூர அலட்சியம் CCTV காட்சிகளில் தெளிவாக பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: வேணாம் சார்... வேணாம் சார்! வலியில் கதறும் குழந்தை! கோவை காப்பகத்தில் பெல்டால் அடிச்ச கொடூர சம்பவம்! வீடியோ வெளியாகி பரபரப்பு....
ஆம்புலன்ஸில் உயிரிழந்த சோகம்
முறையான மருத்துவ உதவியின்றி, ஒரு செவிலியர் கூட இல்லாமல் பிஸ்மீரை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மருத்துவ அலட்சியம் எவ்வளவு கொடூர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு
ஒரு தந்தையின் உயிர் பிச்சை வீணானதை பார்த்த மக்கள், #JusticeForBismeer என்ற ஹேஷ்டேக் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிஸ்மீரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மருத்துவ சேவைகளின் தரம் மற்றும் பொறுப்புணர்வு குறித்து தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு மனித உயிர் அலட்சியத்தால் போகக்கூடாது என்பதே பொதுமக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.
இதையும் படிங்க: பாகனை குத்தி கொன்ற யானையிடம்... இன்று 6 மாதக்குழந்தையை கொடுத்து விபரீத சோதனை! குழந்தை அதன் காலடியில் விழுந்து.... பதறவைக்கும் காட்சி!