மாரடைப்பால் உயிரிழந்த அண்ணன்! கதறி அழுத தம்பி... அடுத்த 3 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்...!!!
கேரளாவில் அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் கதறி அழுத தம்பியும் சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த சில மணி நேரத்திலேயே, அவரது தம்பியும் மாரடைப்பால் உயிரிழந்தார். கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து இரு சகோதரர்கள் உயிரிழந்ததால் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திடீரென உயிரிழந்த 70 வயது அண்ணன்
உப்ரன்கலா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ண பட் (70) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார். அண்ணனின் உடலைப் பார்த்து அவரது தம்பி கேசவ பட் கதறி அழுதுகொண்டிருந்தார்.
இதையும் படிங்க: அடுத்து நிமிஷம் என்ன நடக்கும்ன்னு தெரியல...! ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோதே மருத்துவர்கு நடந்த அதிர்ச்சி.... பகீர் காட்சி!!!
அண்ணனை இழந்த அதிர்ச்சியில் தம்பிக்கும் நெஞ்சுவலி
இந்நிலையில், இரவு 10 மணியளவில் கேசவ பட்டுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டிலேயே அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு பதற்றமடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சில மணி நேரத்தில் அடுத்த மரணம்
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் கேசவ பட் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணன் ராமகிருஷ்ண பட் உயிரிழந்த நிலையில், சுமார் 3 மணி நேரத்துக்குள் தம்பி கேசவ பட்டும் உயிரிழந்தது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு பகுதியில் நடந்த இந்த மரணம் குறித்து உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுவனிடம் அத்துமீறிய முத்தம்.. இளம்பெண் மீது பாய்ந்த வழக்கு!