×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம்.! ஆய்வுக்கு பிறகு ஆந்திர அரசு அனுமதி.!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந

Advertisement

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தய்யா. இவர்  பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார். இந்தஇலையில், இவர் தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயாரித்துள்ளார். அவர் தயாரித்த மருந்து நல்ல பலன் தருகிறது என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து அந்த மருந்தை வாங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவரை தேடி வந்துள்ளனர். 

அவர் தாயரித்த சொட்டு மருந்து தேன், வால் மிளகுடன், ஒரு குறிப்பிட்ட வகையான கத்தரிக்காயின் கூழ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவை கேட்டுக்கொண்டார். 

இதனையடுத்து, இதுதொடர்பான ஆய்வு முடிவு வரும் வரை ஆனந்தய்யாவின் மருந்து விற்பனையை நிறுத்துமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு ஆனந்தய்யா தயாரித்த ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அந்த குழு அறிவித்தது.

இதனையடுத்து ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஆனந்தய்யா தயாரித்து வழங்கும் மருந்தில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லையென்று நிரூபணமாகி உள்ளது. இதனையடுத்து அந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் லேகியத்துக்கு மட்டுமே அனுமதி என்றும், கண்ணில் விடப்படும் சொட்டுமருந்துக்கு அனுமதி இல்லையென்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #legiyam #Andhra
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story