தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிறந்தநாள் பரிசு தருவதாக, சிறுமி 4 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தோட்டத்தில் நடந்த அதிரவைக்கும் துயரம்.!

பிறந்தநாள் பரிசு தருவதாக, சிறுமி 4 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தோட்டத்தில் நடந்த அதிரவைக்கும் துயரம்.!

karnataka-kolar-14-aged-minor-girl-gang-abused-by-4-man Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள பங்காருபேட்டை, காமச்சமுத்திரம் கிராமத்தில் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் நிலயில், நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் சிறுமி தனது பிறந்தநாளை சிறப்பிக்க, அப்பகுதியை சேர்ந்த இளைஞர் சிறுமியுடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். 

அவரும் சிறுமிக்கு பிறந்தநாள் பரிசு தருகிறேன் என்று கூறி, தன்னுடன் வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அன்பு கட்டளைக்கு பின்னால் உள்ள விபரீதம் புரியாத சிறுமியும் இளைஞருடன் சென்றுள்ளார். இளைஞருடன் அவரின் 3 நண்பர்கள் என 4 பேர் சேர்ந்துகொள்ள, சிறுமியை அங்குள்ள தோட்டப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். 

தோட்டத்தில் வைத்து சிறுமியை கத்தி முனையில் மிரட்டி, அனைவரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றனர். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என்று மிரட்டி தப்பி சென்றுள்ளனர். கண்கலங்கிய நிலையில் வீட்டிற்கு வந்த சிறுமி, பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். 

karnataka

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அங்கு மருத்துவர்கள் சிறுமி பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காமசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி, மருத்துவர்களிடம் அவரின் உடல்நலம் & மனநலம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆனந்தகுமார் (வயது 25), காந்தராஜ் (வயது 23), பிரவீன் (வயது 21), வேணு (வயது 19) ஆகியோரை கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Kolar #Minor Girl #Gang Rapped #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story