×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: ஹிஜாப் விவகாரம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம்..!

#BigBreaking: ஹிஜாப் விவகாரம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம்..!

Advertisement

ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாம் மதத்தின் இன்றியமையாத பழக்கம் அல்ல. பள்ளி சீருடை பரிந்துரை நியாயமான நடவடிக்கை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் போராட்டத்தில் களமிறங்கினர். அதனைத்தொடர்ந்து, விஷம எண்ணம் கொண்டவர்கள் எதிர்தரப்பாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு சூழல் உருவாகி, 144 தடையாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான வழக்கும் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்டது. தீர்ப்பையொட்டி உடுப்பி, தட்க்ஷிண கன்னடா போன்ற பல்வேறு மாவட்டங்களில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில், கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், "ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாம் மதத்தின் இன்றியமையாத பழக்கம் அல்ல. பள்ளி சீருடை பரிந்துரை செய்யப்படுள்ளது நியாயமான நடவடிக்கை. அதனை மாணவர்கள் எதிர்க்க இயலாது" என்று தெரிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Hijab Row #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story