தொழிலதிபரின் விபரீத முடிவு.. மனைவி, பச்சிளம் பிஞ்சு என குடும்பமே கொலை.. கண்ணீரில் உறவினர்கள்.!
மனைவி, குழந்தைகளை கொலை செய்து தொழிலதிபர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
கடன் தொல்லை காரணமாக தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், அன்சூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஷ் (வயது 49). இவரின் மனைவி நிஷிதா. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 13 மற்றும் 6 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஹரிஷ் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!
தொழில் நஷ்டம்:
இதனிடையே, நல்லபடியாக வருவாய் வந்த இவரின் தொழில் திடீரென சறுக்கலை சந்தித்து இருக்கிறது. இதனால் வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தாயின் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் நேற்று ஹரிஷ் மற்றும் அவரின் மனைவிக்கு உறவினர்கள் பலமுறை தொடர்புகொண்டும் செல்போனை எடுக்கவில்லை.
அதிர்ச்சி காட்சி:
நீண்ட நேரம் ஆகியும் யாரும் போனை எடுக்காததால் சந்தேகத்தில் வீட்டுக்கு வந்தபோது, ஹரிஷ் தூக்கில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். படுக்கை அறையில் அவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் சடலமாக இருந்தனர். பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நேரில் வந்த அதிகாரிகள் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை:
சிறுமிகள் இருவரும் வாய், மூக்கில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தனர். மேலும், மரணத்துக்கு முன் ஹரிஷ் சொத்து விபரம், கடன், நண்பர்களிடம் இருக்கும் தனது சொத்துக்கள் குறித்தும் எழுதி வைத்த கடிதமும் உள்ளது. இதனால் அவர் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!