×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிலத்தை விற்று ஏழைகளுக்கு உதவி செய்யும் சகோதரர்கள்; கண்கலங்க வைக்கும் பின்னணி!

Karnataka brothers sold land and helping poors

Advertisement

கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்த பாஷா சகோதரர்கள் தங்கள் நிலத்தை விற்று ஏழை குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் உணவினை வழங்கி வருகின்றனர்.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் ஏழை எளியவர்கள் தங்கள் அன்றாட உணவை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கோலாரை சேர்ந்த தஜாமுல் மற்றும் முஷாமில் பாஷா சகோதரர்கள் முடிவு செய்தனர்.

தாங்களின் அயராத உழைப்பால் வாங்கிய 30*40 அளவுள்ள நிலத்தை 25 லஞ்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தை கொண்டு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வாங்கியுள்ளனர்.

பின்னர் காவல் துறையினரின் அனுமதியுடன் தங்கள் நண்பர்களைக் கொண்டு சுமார் 2800 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக சென்று கொடுத்துள்ளனர்.

மேலும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே தற்காலிக டெண்ட் அமைத்து சமைக்க வழியில்லாக ஏழைகளுக்கு நாள்தோறும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். இவர்களின் இத்தகைய தாராள மனதிற்கு பின்புலமாக அமைந்திருப்பது இவர்களது சிறுவயது வாழ்க்கை தான்.

ஷிக்கபால்பூர் மாவட்டம் முகம்மதுபூர் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள் சிறுவயதிலேயே தங்கள் பெற்றோரை இழந்துவிட்டனர். அப்போதே பள்ளிப்படிப்பை கைவிட்ட இவர்கள் தங்கள் பாட்டியுடன் கோலாரில் குடியேறி வேலைக்கு சென்றுள்ளனர்.

கோலாரில் ஒரு நல்ல உள்ளம் இவர்களுக்கு தங்க இடம் கொடுத்துள்ளார். சிறுவயது முதல் இந்து, முஸ்லீம், சீக்கியர்கள் என எந்த பாகுபாடுமின்றி மனிதநேயத்துடன் இவர்களுக்கு பலரும் உதவி செய்துள்ளனர். அந்த மனிதநேயம் தான் தற்போது இவர்கள் தங்கள் சொத்தையும் விற்று ஏழைகளுக்கு உதவி செய்ய தூண்டுதலாக இருந்துள்ளது.

மேலும் அரசு லாக்டவுனை எப்போது தளர்த்தும் என்று தெரியவில்லை. ஆனால் கடவுள் எங்களுக்கு கொடுத்துள்ளவைகளை வைத்து தங்களால் முயன்ற உதவிகளை ஏழைகளுக்கு நிச்சயம் செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pasha brothers #Kollar #karnataka #lockdown #Coronovirus #Helping poors
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story