தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலிக்கு பர்த் டே கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டு செல்போன் திருடி சிக்கிக்கொண்ட காதலன்.. காதல் கண்ணை மறைத்து போட்ட காப்பு.!

காதலிக்கு பர்த் டே கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டு செல்போன் திருடி சிக்கிக்கொண்ட காதலன்.. காதல் கண்ணை மறைத்து போட்ட காப்பு.!

Karnataka Bangalore Man Snatching Mobile Advertisement

காதலிக்கு பிறந்தநாள் பரிசாக செல்போன் கொடுக்க ஆசைப்பட்ட காதலன், அதனை வாங்க காசு இல்லாமல் ஷோ ரூமிலேயே திருடி கைதான சம்பவம் நடந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர் அப்துல் முனராப் (வயது 27). இவரின் காதலிக்கு கடந்த 28 ஆம் தேதி பிறந்தநாள் என்பதால், பரிசாக செல்போன் வாங்கி கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு பணம் இல்லாத காரணத்தால் ஷோ ரூமில் இருந்து அதனை திருடி வர திட்டமிட்டுள்ளார்.

ஜெ.டி.பி நகரில் அமைந்துள்ள செல்போன் ஷோ ரூமுக்கு இரவு நேரத்தில் சென்ற முனராப், ஷோ ரூம் மூடும் வரையில் கழிவறைக்குள் காத்திருந்துள்ளார். கடையின் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றதும், பாத்ரூமில் இருந்தவர் விலை உயர்ந்த மொபைல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது, அவர் நொடியில் 7 செல்போன்களை திருடிவிட்டு பாத்ரூமிலேயே பதுங்கி இருந்துள்ளார்.  காலையில் கடைக்கு வழக்கம்போல வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கியதும், பாத்ரூமில் இருந்து வெளியே வந்த முனாரப் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

karnataka

இதில், அவர் எடுத்து வைத்திருந்த செல்போனில் ஒன்று தரையில் இருக்கவே, செல்போன் எப்படி கீழே விழுந்திருக்கும் என ஆராய்ந்தபோது சி.சி.டி.வி கேமிராவில் திருட்டு முயற்சி அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துலை கைது செய்தனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பி.டி.எம் லே அவுட்டில் தங்கியிருந்தவாறு உணவகத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். காதலிக்கு பரிசு கொடுக்க திருடி வசமாக அகப்பட்டது அம்பலமானது. முனாரப்பை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #mobile #bangalore #police #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story