×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாநில அளவிலான கபடி வீரர்! கால்வாயில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றிய வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.....

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாநில அளவிலான கபடி வீரர் பிரஜேஷ், நாய்க்குட்டியை காப்பாற்றி ரேபிஸ் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது.

Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரஜேஷ் சோலாங்கி என்பவர், மாநில அளவில் புகழ்பெற்ற கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு கால்வாயின் அருகே நின்றுகொண்டிருந்த போது ஒரு நாய்க்குட்டி தடுமாறி அந்தக் கால்வாயில் விழுந்தது.

நாய்க்குட்டியை காப்பாற்றிய வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்

மனிதத்தன்மையோடு நடந்து கொண்ட பிரஜேஷ், உடனே கால்வாயில் குதித்து நாய்க்குட்டியை மீட்டார். ஆனால் அதே நேரத்தில், அந்த நாய்க்குட்டி அவரை கடித்து விட்டது. இந்தக் கடிக்கு பின்னர் அவர் தடுப்பூசி போடாமல் இருந்ததால் ரேபிஸ் தொற்று உருவாகியது.

ரேபிஸ் தாக்கிய வீரர் பரிதாபமாக மரணம்

அந்த கடி காரணமாக பல நாட்களுக்குப் பின் அவருக்கு ரேபிஸ் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தடுப்பூசி இல்லாமல் இருந்ததால், நோய் தீவிரமடைந்து, பிரஜேஷ் படுக்கையில் துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நோயால் துடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதை கலங்கவைத்துள்ளது.

இதையும் படிங்க: படுக்கையில் இரத்த வெள்ளத்தில் தாய்! குளியலறையில் இரத்த வெள்ளத்தில் மகன்! நடந்தது என்ன? பகீர் சம்பவத்தின் பின்னணி..

இந்த மனதை பதறவைக்கும் வீடியோ, பிரஜேஷின் மரண செய்தியுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பரவியது. அவரது மரணம் அப்பகுதி மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடிக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

 

 

இதையும் படிங்க: காதலன் காதலி 6 மணி நேரமாக ஒரே வீட்டில் தனிமையில்! திடீரென காதலியால் இளைஞரின் அந்தரங்கம் பிளேடால் வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரேபிஸ் பிரஜேஷ் #Kabaddi Player Death #puppy rescue rabies #கால்வாய் நாய்க்குட்டி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story