×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்ன பிரச்சனைக்கு இப்படியா பண்ணுவது! நபரின் ஆசனவாய் வழியாக 4 அடி குழாய்... ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்து போன மருத்துவர்கள்..! பகீர் பின்னணி..!!!

ராஜஸ்தான் ஜோத்பூரில் கழிவறை தொடர்பான தகராறில் நபரின் உடலுக்குள் 4 அடி குழாய் செலுத்தி தாக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கழிவறையைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நபர் ஒருவரின் உடலுக்குள் 4 அடி நீளமுள்ள குழாயை நுழைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்தவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவரின் பெருங்குடல் கடுமையாகச் சேதமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

பலத்த காயமடைந்த அந்த நபர், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஜோத்பூரில் உள்ள எம்.டி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றுப் பகுதியில் 4 அடி நீளமுள்ள குழாய் சிக்கியிருப்பதையும், குடல் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.

இதையும் படிங்க: மகளின் திருமண சடங்கிள் நடமாடிய தந்தைக்கு நேர்ந்த விபரீதம்..! கனத்த இதயத்தோடு இரவோடு இரவாக மகன் செய்த அந்த காரியம்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

இதையடுத்து, நவம்பர் 13-ஆம் தேதி மருத்துவர்கள் குழுவினர் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற சிகிச்சைக்குப் பிறகு, உடலுக்குள் செலுத்தப்பட்டிருந்த குழாயை வெற்றிகரமாக அகற்றி அவரது உயிரைக் காப்பாற்றினர்.

காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை

மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைத்துள்ளார். இருப்பினும், கழிவறை தொடர்பான சிறிய தகராறு இவ்வளவு கொடூரமான தாக்குதலில் முடிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி! கிராம திருவிழாவில் ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி! கதறும் பெற்றோர்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஜோத்பூர் தாக்குதல் #Rajasthan Crime #4 அடி குழாய் #கழிவறை தகராறு #Jodhpur Hospital
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story