×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி காட்சி! டீ குடித்த அடுத்த நொடியே சரிந்து விழுந்த 29 வயது ரயில்வே ஊழியர்! மூன்று நிமிடங்களில் பறிப்போன உயிர்.... ஈரக்கொலை நடுங்க வைக்கும் காட்சி!!!

ஜான்சியில் தேநீர் குடித்துக்கொண்டிருந்த 29 வயது ரயில்வே ஊழியர் திடீரென மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேசம் ஜான்சியில் 29 வயது ரயில்வே ஊழியர் ஒருவர் தேநீர் குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ரா சௌராஹா பகுதியில் உள்ள தேநீர் கடையில் நடந்த இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. உடனடி உதவி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை.

டீ குடித்த சில நொடிகளில் மயக்கம்

தகவலின்படி, அந்த இளைஞர் வழக்கம்போல தேநீர் கடைக்கு வந்து டீ வாங்கி அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனால் அங்கு இருந்தவர்கள் பதற்றமடைந்தனர். முதலில் அவர் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து, அருகிலிருந்தவர்கள் உடனடியாக முதலுதவி செய்ய முயன்றனர்.

இதையும் படிங்க: பகீர் வீடியோ! சாக்கடைத் தண்ணீரில் ரோட்டோர கடையில் சமையலா....இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி காட்சி!!!

மூன்று நிமிட போராட்டம் பலனின்றி

அந்த இளைஞர் சுமார் மூன்று நிமிடங்கள் உயிர்க்காக போராடியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து, உதவி அளிக்க முயன்றும் நிலைமை மாற்றமின்றி இருந்தது. இதையடுத்து உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சமூக வலைதளங்களில் பரவும் காட்சி

மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த திடீர் மரணம் குறித்து அப்பகுதியில் சோக நிலை நிலவுகிறது. இதற்கிடையில், சம்பவம் நடந்த தருணத்தை பதிவு செய்த CCTV காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஆரோக்கியமாக இருந்த இளைஞர் ஒருவர் சில நொடிகளில் உயிரிழந்தது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jhansi incident #ரயில்வே ஊழியர் மரணம் #Tea shop collapse #CCTV viral video #sudden death India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story