×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்ட பகீர் காட்சிகள் வெளியானது!! வைரல் வீடியோ இதோ..

வீடியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்ட பகீர் காட்சிகள் வெளியானது!! வைரல் வீடியோ இதோ..

Advertisement

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் நீண்டகாலமாக பிரதமராக இருந்த இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக பிரதமா் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிப் பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்தல் வருவதை ஒட்டி, மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றின் வாயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி பிரச்சார கூட்டத்தில் ஷின்சோ அபே பங்கேற்றாா்.

கூட்டத்தில் ஷின்சோ பேசிக்கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. ஷின்சோவை குறிவைத்து சுடப்பட்டதில், முதல் குண்டு அவர் மீது படவில்லை. சத்தம் கேட்டு ஷின்சோ திரும்பியபோது இரண்டாவது குண்டு அவரது நெஞ்சு பகுதியில் பட்டு அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

இதனை அடுத்து ஷின்சோவை பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும், ஷின்சோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோவை மர்மநபர் துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#japan #Japan Prime minister
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story