×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் சுய ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Janatha curfew extened tomorrow

Advertisement

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 370க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டது.  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லவும், நிகழ்ச்சிகளை தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடி காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தபட்டிருந்தனர். மேலும் பேருந்துகள, ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #Selfsafety #modi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story