×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை பாடாய் படுத்தின குடிபோதை கணவன்! ஆபாச பேச்சு.... அம்மாவின் போனை திறந்து பார்த்த 10 வயது மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இன்ஜினியர் கணவனின் டார்ச்சரால் முடிந்த வாழ்க்கை.... நடுங்கவைக்கும் வீடியோ..!!!

ஜெய்ப்பூரில் கணவரின் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ, சிசிடிவி ஆதாரங்களுடன் போலீஸ் விசாரணை தீவிரம்.

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இளம்பெண் ஒருவர் கணவரின் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கு பிறகு வெளிவந்த வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வழக்கை மேலும் பரபரப்பாக்கியுள்ளன. தற்போது அரசு அதிகாரியான கணவர் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூர் கல்யாண்புரா பகுதியைச் சேர்ந்த அனு மீனா, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆரம்பத்தில் இது சாதாரண தற்கொலை வழக்காக கருதப்பட்ட நிலையில், பின்னர் அவரது மொபைல் போனில் இருந்த ஆதாரங்கள் பல அதிர்ச்சி தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளன.

குடிபோதையில் தினமும் தாக்கிய கணவர்

தகவலின்படி, பொதுப்பணித்துறையில் (PWD) உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் கௌதம் மீனா, தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. அடிக்கடி தகராறு ஏற்பட்டதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹோட்டலில் ரூம் போட்டு காதலிக்கு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்.... படுக்கை அறையில் இருந்த போது திடீரென என்ட்ரி கொடுத்த மனைவி! ரவுண்டு கட்டி வெளுத்தெடுத்த வீடியோ வைரல்..!!!

ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து மனைவியை கொல்ல முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பயந்துபோன அனு, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரு குடும்பத்தினரும் பேசி சமாதானப்படுத்தி மீண்டும் சேர்த்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

தற்கொலைக்கு முன் வீடியோ கால்

ஆனால் அதன்பிறகும் பிரச்சினைகள் குறையவில்லை என கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த அனு, தற்கொலைக்கு முன்பாக தனது கணவருக்கு வீடியோ கால் செய்ததுடன், சில உறவினர்களுக்கும் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதன்பின் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அனு இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அவரது 10 வயது மகன் தாயின் மொபைல் போனை திறந்து பார்த்தபோதுதான் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில், கௌதம் மீனா தனது மனைவியை தாக்கி துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

வைரலான சிசிடிவி காட்சிகள்

இதற்கிடையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மகன் கண்முன்னே மனைவியை செருப்பால் அடித்து கீழே தள்ளும் காட்சிகளும், முகத்தில் காறித்துப்பும் தருணங்களும் இடம்பெற்றுள்ளன.

“அப்பா எப்போதும் அம்மாவை இப்படித்தான் அடிப்பார்” என்று அந்த தம்பதியின் 10 வயது மகனும், 8 வயது மகளும் உறவினர்களிடம் கதறி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைப்பற்றப்பட்ட வீடியோ மற்றும் மொபைல் ஆதாரங்களின் அடிப்படையில், ஜெய்ப்பூர் போலீசார் கௌதம் மீனா மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jaipur News #வரதட்சணை கொடுமை #Rajasthan Crime #பெண் தற்கொலை #Viral cctv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story