சாப்பிடாமல் இருந்த குழந்தை! காரணம் கண்டுப்பிடிக்க ரகசிய கேமராவை வைத்த தந்தை! பணிப்பெண் செய்த கொடூரம்! பெற்றோர்களே உஷார்..!!
ஜபல்பூரில் 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய பணிப்பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை. வைரலான CCTV காட்சிகள் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் முதல் கடமை என்றாலும், சில நேரங்களில் நம்பிக்கையே மிகப் பெரிய ஆபத்தாக மாறுகிறது. ஜபல்பூரில் நடந்த இந்த சம்பவம், பணிக்கு செல்லும் பெற்றோருக்கு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
பணிப்பெண் நியமனம்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த இளநிலைப் பொறியாளர் முகேஷ் விஸ்வகர்மா மற்றும் நீதிமன்ற ஊழியர் சோனாலி சர்மா தம்பதியினர், தங்களது 2 வயது மகன் மான்விக்கை கவனிக்க ரஜினி சவுத்ரி என்ற பெண்ணை மாதம் ரூ.5,000 சம்பளத்தில் பணியில் அமர்த்தினர்.
அதிர்ச்சி தரும் கொடூரங்கள்
பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரங்களில், அந்த பணிப்பெண் குழந்தைக்குப் பால், உணவு கொடுக்காமல் தானே உண்டு வந்துள்ளார். மேலும், கூர்மையான சீப்பால் குத்துவது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, கழுத்தை நெரிப்பது போன்ற சொல்ல முடியாத கொடூரங்களையும் நிகழ்த்தியுள்ளார். இதனால் சிரித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென உணவு மறுத்து அடிக்கடி நோய்வாய்ப்படத் தொடங்கியது.
இதையும் படிங்க: நொடியில் வந்து விளையாடிய எமன்! தண்ணீர் பாட்டில் மூடியை விழுங்கி 1.5 வயது குழந்தை உயிரிழப்பு! பெரும் அதிர்ச்சி சம்பவம்..
CCTV வீடியோ வெளிச்சம் போட்ட உண்மை
சந்தேகம் கொண்ட பெற்றோர் வீட்டில் ரகசிய கேமராக்களை பொருத்தினர். அதில் பதிவான காட்சிகள் அவர்களை உறைய வைத்தன. அழுது கொண்டிருந்த குழந்தையை இரக்கமின்றி தாக்குவது, பசியால் வாடும் குழந்தைக்கு தனது எச்சில் உணவை ஊட்டுவது போன்ற கொடூரங்கள் தெளிவாக பதிவாகியிருந்தது.
நீதிமன்ற தீர்ப்பு
2022 ஜூன் மாதம் மதன் மஹால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஜினி கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றம், சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை முக்கிய ஆதாரங்களாக ஏற்றது.
இந்தியத் தண்டனைச் சட்டம் 323-வது பிரிவு மற்றும் சிறார் நீதிச் சட்டம் 75-வது பிரிவின் கீழ், ரஜினிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தை பாதுகாப்பில் மெத்தனம் காட்ட முடியாது என்று நீதிபதி கடுமையாக தெரிவித்தார்.
வைரல் காட்சிகள் – பெற்றோருக்கு எச்சரிக்கை
தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. இதனால் பணிக்கு செல்லும் பெற்றோரிடையே பெரும் அச்சமும், குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு, பணிப்பெண்களை நியமிக்கும் முன் பின்னணி சரிபார்ப்பு மற்றும் தொடர்ந்த கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே இந்த சம்பவத்தின் முக்கிய பாடமாகும்.