×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்ணின் தில்லாலங்கடி வேலை... முகத்தை மூடி குழந்தையைக் கடத்தி ஓட்டம் பிடித்த பெண்! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.... சிக்கிய சிசிடிவி காட்சி!!!

மத்திய பிரதேசம் ஜபல்பூரில் சக தொழிலாளியின் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற பெண்ணை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Advertisement

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சக தொழிலாளியின் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற பெண்ணை காவல்துறையினர் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர். மண்டலா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண், கூலி வேலைக்காக ஜபல்பூர் வந்திருந்தார். குழந்தையின் பெற்றோருடன் நெருக்கமாக பழகிய நிலையில், அவர்களின் நம்பிக்கையை பயன்படுத்தி குழந்தையை தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர்

குழந்தை திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கௌரிகாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: மாடியிலிருந்திய கீழே விழுந்த குழந்தை! அடுத்த நொடி கையில் இருந்ததை வீசி விட்டு இளைஞன் செய்த அசாத்திய காரியம்! நெகிழ்ச்சி வீடியோ..!!!

அப்போது முகத்தை மூடியபடி ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாகச் செல்லும் காட்சி போலீசாருக்கு கிடைத்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில், அதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்த போலீசார்

விசாரணையில், குழந்தையை கடத்திய பெண் அதை ரயில் மூலம் தனது சொந்த ஊரான மண்டலாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜபல்பூர் ரயில் நிலையத்தை போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர்.

அந்த பெண் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜபல்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் எம்.டி. நகோதியா தலைமையில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. குழந்தை கடத்தல் முயற்சி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: திருமணம் ஆகி வெறும் 7 நாள் தான்! அதிரடியாக விவாகரத்து வழங்கிய கோர்ட்... அப்படி என்னதான் பிரச்சனை தெரியுமா? விசித்திர சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஜபல்பூர் குழந்தை கடத்தல் #Jabalpur Police #குழந்தை மீட்பு #CCTV காட்சி #மத்திய பிரதேசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story