திருமண நாளை கொண்டாடிய சில நாட்களுக்குள் ஐ.டி வேலை பார்க்கும் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! கடிதம், செல்போனில் கிடைத்த அந்த ஆடியோ....பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!!
திருவனந்தபுரம் அருகே ஐ.டி. ஊழியர் விக்னேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் எழுதிய கடிதம் மற்றும் செல்போனில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கணவர் அபிலாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில், 27 வயதான விக்னேஸ்வரி என்ற ஐ.டி. ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதம் மற்றும் செல்போனில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அவரது கணவர் அபிலாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை
நாகர்கோவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும், விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண நாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஸ்வரி தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடிதம் மற்றும் செல்போனில் கிடைத்த ஆதாரங்கள்
விசாரணையின்போது, விக்னேஸ்வரி எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், கணவரின் மதுப்பழக்கம் மற்றும் தொடர்ந்து நடந்ததாகக் கூறப்படும் கொடுமைகள் காரணமாக மனவேதனை அடைந்ததாக அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது செல்போனை ஆய்வு செய்யுமாறும், அதில் முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்போனை ஆய்வு செய்த போலீசார், உடலில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் மற்றும் தாயிடம் பேசுவதற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒலிப்பதிவு உள்ளிட்ட சில ஆதாரங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணவர் கைது
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், விக்னேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டியதாக அபிலாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த விக்னேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "அம்மா.. என் செல்போனை செக் பண்ணுங்க, எல்லாமே இருக்கு!" - தற்கொலைக்கு முன் இளம்பெண் வெளியிட்ட அந்த ஆடியோ. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!