×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டா மூலம் காதல் வலையில் சிக்கிய கல்லூரி மாணவி! பணக்காரன்னு நம்பி ஓட்டம் வேற.... இறுதியில் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!!!

இன்ஸ்டாகிராமில் கோடீஸ்வரர் போல நடித்து கல்லூரி மாணவியை காதல் வலையில் சிக்கவைத்த வாலிபரிடம் இருந்து மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

மத்திய பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபரின் காதல் வலையில் சிக்கிய 18 வயது கல்லூரி மாணவி, போலீசாரின் தீவிர நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டார். போலியான ஆடம்பர வாழ்க்கையை காட்டி மாணவியை ஏமாற்றியதாக கூறப்படும் வாலிபர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

ஷட்டோல் மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியுடன் சமூக வலைதளம் மூலம் பழகிய கரண் தானுக் என்ற இளைஞர், தன்னை பெரிய தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர் போல அறிமுகப்படுத்தியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொகுசு வாழ்க்கை போலி முகமூடி

குவாலியர் பகுதியைச் சேர்ந்த கரண் தானுக், சுவர்களில் புட்டி மற்றும் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் பணியாற்றி வந்துள்ளார். வேலைக்காக சென்ற சொகுசு பங்களாக்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து, அவற்றை தனது சமூக வலைதள கணக்கில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: 9-ம் வகுப்பு மாணவியை 4 மாதங்களாக மாறி மாறி பலாத்காரம் செய்து சிதைத்த 10 பேர்..! ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு நடந்த கொடூரம்...வெளியான திடுக்கிடும் உண்மைகள்!!!

‘கரண் ராஜ்புத்’ என்ற பெயரில் இயங்கிய அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான பதிவுகளை பார்த்த மாணவி, அவற்றை உண்மை என நம்பி அவருடன் நெருக்கமாக பழகத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை தன்னுடன் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவி வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் மொபைல் சிக்னல்களை ஆய்வு செய்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது மொரினா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பத்திரமாக மீட்கப்பட்ட மாணவி

தகவலின்படி அங்கு விரைந்த தனிப்படை போலீசார், மாணவியை பத்திரமாக மீட்டனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்தபெயிண்டர் கரண் தானுக் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள வாலிபரை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் போலி அடையாளங்களை நம்புவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்த சம்பவம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: ஆபாச வீடியோ அனுப்பு! இல்லாட்டி இதுதான் நடக்கும்.... 14 வயது சிறுவர்கள் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்! அடுத்தடுத்த அதிர்ச்சியால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Instagram #மாணவி மீட்பு #Madhya pradesh #காதல் வலை #Cyber crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story