×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா! இந்த வருஷம் அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவு இதுதானா? அதுவும் இவ்வளவு பேரா? அதிர்ச்சி தகவல்

indins most likely ate food is briyani

Advertisement

இன்றைய காலகட்டத்தில் சிறிய பொருத்திகள் துவங்கி நாம் சாப்பிடும் வினவு வரை அனைத்தும் இணையதளத்தின் மூலம் வாங்கப்படுகிறது. மேலும் உணவு வாங்குவதற்காக ஸ்விக்கி இணையதளம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2019 ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரையில்  தங்கள் நிறுவனம் செயல்படும் 500 நகரங்களில் ஆய்வு செய்து   இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவு குறித்து ஸ்விக்கி நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவாக  பிரியாணி முதலிடத்தை பிடித்திருக்கிறது.மேலும்  ஒரு நிமிடத்தில் மட்டும் 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், நொடிக்கு 1.6 பிரியாணி ஆர்டர் வந்ததாகவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஸ்விக்கியில் புதிதாக கணக்கு தொடங்குபவர்களும் முதலில் பிரியாணி தான் ஆர்டர் செய்துள்ளனர்.

மேலும் 128 சதவீதம் அதிகரித்து கிச்சடி  இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி சைவப்பிரியர்கள் மத்தியில் பீட்ஸா முக்கிய இடம் பெற்றுள்ளது. மேலும்  பீட்ஸாவில் அதிக காளான், சீஸ், வெங்காயம், பன்னீர், குடை மிளகாய் ஆகியவற்றை சுவைக்காக வாடிக்கையாளர்கள் தூவ சொல்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

அடுத்ததாக டெசர்ட் வகையில் குலாப் ஜாமுன், பருப்பு அல்வா ஆகிய இனிப்பு வகைகளை இந்தியர்கள் விரும்பி சாப்பிடுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் புதுவரவான ஃபலூடாவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.   
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Food #swiggy #briyani
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story