×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரயில்வேயில் அறிமுகமாகிறது புதிய வசதி! இனி உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்

Indian railway joins with isro to get train movement efficiently

Advertisement

இந்தியன் ரயில்வே, ரயில்களின் இயக்கத்தை கண்கானிக்க இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் செயற்கைகோள் உதவியுடன் ரயில்களின் இயக்கத்தை துல்லியமாக கண்கானிக்க முடியும். 

இந்தியாவில் ஓடும் ரயில்களின் இயக்கம், அவைகள் செல்லும் இடம், வேகம் முதலியவற்றை செயற்கைகோள் உதவியுடன் உடனுக்குடன் பெற்று ரயில்வேயின் கண்கானிப்பு அறைக்கு அனுப்பும் வசதியை இஸ்ரோ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய வசதியை இந்தியன் ரயில்வேயில் பயன்படுத்த இஸ்ரோவுடன் இந்திய ரயில்வே நிறுவனம் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. 

இந்த வசதியானது முதல் கட்டமாக தலைநகரான டெல்லியிலிருந்து புறப்படும் டெல்லி-பாட்னா, டெல்லி-அம்ரிஸ்டர், டெல்லி-ஜம்மு ஆகிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்திற்கு பின்பு இந்த வசதி நாடு முழுவதும் உள்ள ரயில்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய வசதியின் மூலம் இந்திய ரயில்வேயின் கண்கானிப்பு அறை புதிய வடிவம் பெறவுள்ளது. ரயில்களின் இயக்கங்கள் உடனுக்குடன் துல்லியமாக கட்டுப்பாடு அறைக்கு அனுப்பப்படும். இதற்கென்று பிரத்யேகமாக ரயில் இருக்கும் இடத்தை கண்டறிய RTIS எனும் கருவி அனைத்து ரயில்களிலும் பெருத்தப்படும். மேலும் ரயில்களின் வேகத்தை பெற GAGON - எனும் தொழில்நுட்பம் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கருவிகள் மூலம் ஒரு ரயில் புறப்படும் நேரம், ரயில் நிலையங்களை அடையும் நேரம், ரயிலின் வேகம், ரயில் இடையில் நிற்பதால் உண்டாகும் காலதாமதம்,  ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஏற்படும் விபத்து போன்றவைகள் உடனுக்குடன் தானாகவே ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் வந்துவிடும். இதன் மூலம் ரயில் விபத்துகள் குறித்து உடனே அறிந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த முடியும். 

இந்த புதிய வசதி அறிமுகம் செயவதற்கு முன்பு அனைத்துமே ரயில் ஆப்பரேட்டர்கள் மூலமே தகவல்கள் பரிமாறப்பட்டன். இதனால் அனைத்தையும் துல்லியமாக பெற முடியவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் இதனை சரி செய்துள்ளதால் பயணிகளும் தாங்கள் பயணம் செய்யும் ரயில் குறித்து அணைத்து விவரங்களையும் துல்லியமாக இனி பெற முடியும். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#railway #ISRO
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story