கோலி ஆக்ரோசமாக ஆடுவதில் எங்களுக்கு சமமானவரே- ஹைடன்; திடீர் பல்டிக்கு இது தான் காரணமா?
indian captan viraht kohli - mathew hyden aus
இந்திய கேப்டன் விராட் கோலி, ஆக்ரோஷமாக விளையாடுவதில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சமமானவர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் 1-1 என்று தொடர் சமநிலையில் உள்ளது.
ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை மிகவும் எளிதாக இந்திய அணி வென்றுவிடும் என அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அமைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் ஆடும் 11 வீரர்களை தேர்ந்தெடுக்கும் விதம் தான் என பலர் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கேப்டன் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினுக்கும் இடையே இரண்டு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இதுவும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து ஹேடன் கூறுகையில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி, ஆக்ரோஷமாக விளையாடுவதில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சமமானவர். அவ்வளவு எளிதாக எதையும் விடுபவர் அல்ல. உண்மையான விளையாட்டு உணர்வுடன், ரசித்து விளையாடும் தன்மை கொண்டவர். இதுவரை கோலி எவ்வித எல்லையையும் மீறவில்லை.
அதனால் எவ்வித தவறும் இல்லை. மொல்போர்ன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு அதிக சாதகமானதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்னைப்பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றுவதை விட, இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது.’ என்றார்.