இரண்டு மடங்கு எடை... 100 பயணிகள்.... திடீரென ஆற்றில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்.!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது நாவ்காச்சியா எனும் பகுதி. இப்பகுதியில் உள்ள கண்டக் நதியில் 100 பேர் கொண்ட படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாவ்காச்சியா என்னும் பகுதியில் கண்ட நதி ஒன்று உள்ளது. அந்த நதியின் வழியாக 40 பேர் மட்டுமே பயணம் செய்யவுள்ள படகில் 100 பேர் பயணம் செய்ததால் விபத்துக்கு உள்ளன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படகில் ஒன்றில் இரண்டு மடங்கு எடையுடன் 100 பேர் பயணம் மேற்கொண்டதால் படகானது பாராம் தாங்காமல் நதியின் இடையே அவிழ்ந்திருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகில் பயணம் செய்த 100 பேரில் 24 பேர் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையின் மீட்புக்குழுவினர், மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.