இறுதிவரை தைரியத்தை இழக்காமல் வீரத்துடன் போராடியுள்ள அபிநந்தன் வெளியான தகவல்.!
india vimani - abinaandan - pakistan army
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை துரத்தி அடித்து விரட்டிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் விமானத்தை துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. இதனால் பாராசூட் மூலம் குதித்த அபிநந்தன் இந்திய எல்லையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பிம்பர் மாவட்டம் கரோன் என்ற பகுதியில் தரையிறங்கி உள்ளார்.
உடனே அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் அவரை சுற்றிவளைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் இந்தியா என்று கூற அவர்கள் உடனே அவரை தாக்க தொடங்கியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட அபிநந்தன் வீரத்துடன் விமானிகள் பாதுகாப்பிற்காக கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு வானை நோக்கி சுட்டு அவர்களை எச்சரித்துள்ளார்.
பிறகு சில அடி தூரம் பின்னோக்கி சென்ற அவர் அவரிடம் இருந்த சில முக்கிய ஆவணங்களை அழித்துள்ளார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிபட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் இன்று அவரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.