×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமெரிக்காவின் மிரட்டலையும் தாண்டி இன்று கையெழுத்தாகுமா எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம்..!!

india doesnt care about america

Advertisement

சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

ரசியாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிட வேண்டும், இல்லையெனில் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரசியாவிடம் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் வகையில் ‘காட்சா’ என்ற சிறப்பு சட்டத்தையும் அமெரிக்கா இயற்றி இருக்கிறது. சீனாவின் மீது நடவடிக்கையையும் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் சீனா, அமெரிக்கா, ரஷியா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவும் ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குகிறது. 
 
இந்நிலையில் ரசியாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவிற்கு வந்துள்ள ரசியா அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் இருதரப்பு இடையே இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் சீனா இந்த S-400 ரக ஏவுகணைகளை வாங்கியதற்காக அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. மேலும் அந்த ஏவுகணைகளை வாங்கவிருக்கும் இந்தியாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இன்று அந்த ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் அமெரிக்காவின் விரோதத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்படக்கூடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#s400 agreement #america against india and russia
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story