தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆணுறுப்பில் கடித்த பாம்பு; வாயில் நுரைதள்ளி, உடல் நீலநிறமாகி 15 வயது சிறுவன் பலி.!

ஆணுறுப்பில் கடித்த பாம்பு; வாயில் நுரைதள்ளி, உடல் நீலநிறமாகி 15 வயது சிறுவன் பலி.!

in Uttar Pradesh Dewas a Boy Dies by Snake Bite  Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தேவஸ் மாவட்டம், கன்குன்ட் கதம்ப பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுவன் சாந்தன் மால்வியா. இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 09ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவன் நேற்று தனது வீட்டுக்கு வெளியே கட்டில் படுக்கையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். 

உடல் நிறம் மாறி சிறுவன் பலி

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் சாந்தனின் பேண்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்று, அவரை அந்தரங்க உறுப்பில் தீண்டி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட வலியில் எழுந்து அலறிய சிறுவன், பாம்பை கையில் பிடித்தவாறு கதறி இருக்கிறான். 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் பெற்றோர், உடனடியாக மகனை மீட்டுள்ளனர். மேலும், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிறுவனின் உடல் முழுவதும் விஷம் பரவி, வாயில் நுரைதள்ளி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடலும் நீல நிறத்துடன் மாறி இருக்கிறது.

இந்த விஷயம் குறித்து காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடகக் காதல்... கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.!! 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது.!!

இதையும் படிங்க: பகீர் சம்பவம்... கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவன்.!! கத்திரிக்கோலால் சம்பவம் செய்த காதல் ஜோடி.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Boy Dies #Snake bite #உத்திர பிரதேசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story