9 மாத கைக்குழந்தையை கொலை செய்த தாய்; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.!
9 மாத கைக்குழந்தையை கொலை செய்த தாய்; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.!
சகோதரிகளுக்குள் நடந்த வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த தாய் தனது மகனை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டம், கோட்வாலி, கிருஷ்ண நகர் பகுதியில் வசித்து வருபவர் கொலு கோண்டி. இவரின் மனைவி அஞ்சு தேவி (வயது 35).
இதையும் படிங்க: 16 தையல் போடும் அளவு பகீர்.. மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவன்.!
அஞ்சு தேவி கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தையை பிரசவித்து இருக்கிறார். பிரசவத்திற்கு பின்னர் அஞ்சு தனது தாயின் வீட்டிலேயே இருந்த நிலையில், இவர்களுடன் அஞ்சுவின் சகோதரியும் இருந்துள்ளார்.
அக்கா தங்கை சண்டையில் பச்சிளம் பிஞ்சு கொலை
தாயின் வீட்டில் இருந்த அஞ்சுவுக்கும், அவரின் சகோதரி மனிஷாவுக்கும் இடையே அவ்வப்போது தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அஞ்சு, 9 மாத கைக்குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும், தனது சகோதரியை வழக்கில் சிக்க வைக்க அஞ்சு தேவி இவ்வாறான செயலை செய்தது விசாரணையில் அம்பலமான நிலையில், காவல்துறையினர் குழந்தை உயிரிழந்த காரணத்தால் அஞ்சு தேவியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை காரில் கடத்தி சீரழித்த இளைஞர்; ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டு பெருங்கொடுர செயல்.!