2 வயது மகளிடம் கள்ளக்காதலன் அத்துமீற அனுமதித்த தாய்.. துடிதுடித்து பலியான பிஞ்சு.!
கள்ளகாதலனுக்கு 2 வயது மகளை விருந்தாக்கிய தாயின் கொடூர செயலால் பச்சிளம் பிஞ்சு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கள்ளகாதலனுக்கு 2 வயது மகளை விருந்தாக்கிய தாயின் கொடூர செயலால் பச்சிளம் பிஞ்சு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கள்ளக்காதல் பழக்கம்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வருபவர் ரீனா ஷேக் (வயது 30). இவரின் கள்ளக்காதலன் பர்கான் ஷேக் (வயது 19). இருவரும் திருமணத்தை மீறிய உறவிலிருந்த நிலையில், தற்போது ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மூச்சுத்திணறி பலி:
ரீனாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பர்கான் ஷேக் இரண்டு வயது குழந்தை எனும் பாராமல் அவரை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை மூச்சுச்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
மருத்துவமனையில் அம்பலமான உண்மை:
குழந்தையிடம் பர்கான் அத்துமீறுவதை வேடிக்கை பார்த்த ரீனா, குழந்தை மயங்கியதை கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியுள்ளார்.
போக்ஸோவில் கைது:
ஆனால் மருத்துவர்களின் பரிசோதனையில், குழந்தையின் அந்தரங்க உறுப்பில் ரத்தக்காயம் இருப்பது தெரியவரவே, தாயிடம் விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரியவந்துள்ளது. பின் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் வந்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.