போதையில் சட்டக்கல்லூரி மாணவர் ஏற்படுத்திய விபத்து; பெண் பரிதாப பலி.!
போதையில் சட்டக்கல்லூரி மாணவர் ஏற்படுத்திய விபத்து; பெண் பரிதாப பலி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டத்தில் வசித்து வருபவர் ரக்சித் சௌரசியா (20). தற்போது இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில், சட்டக்கல்லூரியில் மாணவராக பயின்று வருகிறார்.
வதோடியா பல்கலை., வளாகத்தில், மாஸ் கம்யூனிகேஷன் துறையில் பிரன்சு சௌகான் என்பவர் படித்து வருகிறார். இருவரும் நண்பர்கள். பிரன்சு சௌகான் தந்தை தொழிலதிபர். இவர் தனது காரை நேற்று கொண்டு வந்த நிலையில், இருவரும் மதுபானம் அருந்திவிட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: 18 மாதங்களாக 20 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் கூட்டம்; வீடியோ காண்பித்து கொடுமை.!
விபத்தில் சிக்கி பலி
போதையில் ரக்சித் காரை இயக்கிய நிலையில், 12 மணியளவில் வதோதரா சந்திப்பில் காரை ஓட்டியுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஹெமாளிப்பேன் படேல் பெண்மணி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நான்கு பேர் படுகாயமடைந்து இருக்கிறார். விபத்தை ஏற்படுத்தியவர்களை பிடிக்க முற்பட்டபோது, போதையில் வாக்குவாதம் செய்து ஓடி இருக்கிறார். சௌராசியாவை காவல்துறையினர் கைது செய்த நிலையில், பிரன்சு தப்பிச் சென்றார். விபத்து குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் ஆணுறுப்பு நறுக்... கணவன், சகோதரர்கள் பகீர் செயல்.!