×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"புஷ்பா"வை போல "ஃபயர் கேங்ஸ்டரா" மாறனும்.. அப்பாவியை கொலை செய்த 3 சிறார்கள்.! பரபரப்பு வாக்குமூலம்.!

புஷ்பாவை போல ஃபயர் கேங்ஸ்டரா மாறனும்.. அப்பாவியை கொலை செய்த 3 சிறார்கள்.! பரபரப்பு வாக்குமூலம்.!

Advertisement

அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தை பார்த்து, குற்ற உலகில் தாதாவாக நினைத்த 3 சிறுவர்கள் செய்த படுபயங்கர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜகாங்கீர்புரி பகுதியில் உள்ள மருத்துவமனையில், ஷிபு என்ற நபர் கத்திக்குத்து காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போதே உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், ஷிபுவை 3 சிறுவர்கள் கத்தியால் குத்திய சி.சி.டி.வி காட்சிகள் கிடைக்கவே, சிறுவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புஷ்பா உள்ளிட்ட கேங்ஸ்டர் படத்தை பார்த்து, அதில் வரும் வில்லன் போல சிறுவர்கள் மாற விரும்பியுள்ளனர். 

இவர்கள் திட்டமிட்டு ஒருவரை கொலை செய்து, அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிரபலமாகவும் திட்டமிட்டுள்ளனர். தங்களின் குளுவ்க்கு பட்நாம் கேங் என்றும் பெயரிட்ட நிலையில், ஷிபுவிடம் வேண்டுமென்றே சண்டைக்கு சென்று கத்திக்குத்து மற்றும் வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் மூவரும் தற்போது சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே திரைத்துறை மோகத்தால் பள்ளிக்காதல், ஒருதலைக்காதல், கொலை, கற்பழிப்பு என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், கேங்ஸ்டர் படத்தை பார்த்து 3 சிறார்கள் கொலைகாரர்களான பகீர் சம்பவமும் நடந்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #India #Murder #Teenagers #Gangster #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story