வெளிநாட்டில் வாழும் கணவர்! கள்ளக்காதலில் ஈடுப்பட்ட மனைவி! மாமனாரின் அதிரடி செயல்!
Illegal relations

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியா மாவட்டம் கந்த் பிப்ரா கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுப்பட்டதால் மாமனார் உட்பட உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஜோடியின் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அவரது மனைவி அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த இளைஞன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து வந்து சென்றுள்ளார்.
ஒரு நாள் அந்த இளைஞர் வீட்டிற்குள் போவதை பார்த்த அந்த பெண்ணின் மாமனார் பார்த்து விட்டு உடனே வீட்டின் கதவை பூட்டியுள்ளார். அதனை அடுத்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
அவர்கள் அனைவரும் வந்து அந்த கள்ளக்காதல் ஜோடியினை கம்பத்தில் கட்டி வைத்து அவர்களின் மூக்கை அறுத்துள்ளனர். அதன் பின்னர் வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி மாமனார் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.