×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த வார்த்தையை சொல்லிருக்க கூடாது! நான் தப்பு பண்ணிட்டேன்... ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை! மகனை இழந்து துடி துடிக்கும் தந்தை... வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!

மும்பை ஐ.ஐ.டி. மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர்கள் மீது சாதி ரீதியிலான துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் விசாரணை கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே கடந்த 18-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாட் ஜிபிடி பயன்படுத்தியதாகக் கூறி இரு பேராசிரியர்கள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக சாஹிலின் தந்தை ரவீந்திர வாகோடே போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராசிரியர்கள் மீது தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

மிட் செமஸ்டர் தேர்வின்போது சாட் ஜிபிடி பயன்படுத்தியதாகக் கூறி பேராசிரியர்கள் ஷிரீஷ் கேதாரே மற்றும் சூரியநாராயண தூல்லா ஆகியோர் சாஹிலை கடுமையாக பேசியதாகவும், கடந்த மூன்று மாதங்களாக மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தந்தை தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், பொய் வழக்குகள் மூலம் வாழ்க்கையை சீரழித்துவிடுவோம் என மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 10 வருட காதல் வெறும் 10 நிமிடத்தில் முடிந்தது...! வேலை கிடைத்த அதிகாரத்தில் காதலன் செய்த அந்த ஒரு செயல்... இளம்பெண்ணை இழந்து கதறும் குடும்பத்தினர்! வெளிவந்த பகீர் பின்னணி...!!!

மாணவர்கள் போராட்டம்; டீன் பதவி பறிப்பு

சாஹிலின் மரணத்துக்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பேராசிரியர் சூரியநாராயண தூல்லா டீன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘என் மகன் வேதனையில் இருந்தான்’ - தந்தை வேதனை

தனது மகன் திறமையான மாணவர் என்றும், பேராசிரியர்களின் சாதி ரீதியான துன்புறுத்தல் காரணமாகவே கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் ரவீந்திர வாகோடே தெரிவித்துள்ளார். மகன் வேதனையில் இருந்தபோது, ‘கொஞ்சம் பொறுத்துக்கொள்; அதன்பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என தான் கூறியதாகவும், அந்த வார்த்தைகளைச் சொன்னது தற்போது மிகப்பெரிய தவறாகத் தோன்றுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சாஹிலின் மரணம் தொடர்பான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், IIT Bombay மாணவர் தற்கொலை விவகாரம் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் புகார் நடைமுறைகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: இரவில் வீட்டை விட்டு வெளியே போன 14 வயது சிறுமி! தேடி அழைத்து வந்த பெற்றோர்... விடிந்ததும் வீட்டில் பெற்றோர்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நடந்தது என்ன? பகீர் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மும்பை ஐ.ஐ.டி #Sahil Waghode #மாணவர் தற்கொலை #சாதி ரீதியான துன்புறுத்தல் #IIT Bombay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story