கல்யாணியை 10 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கொடூரம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை! பகீர் சம்பவம்..!!!
என்.டி.ஆர் மாவட்டம் இப்ராஹிம்பட்டினத்தில் கல்யாணி 10 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷாஃபி முக்கிய குற்றவாளி என போலீசார் கண்டறிந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் இப்ராஹிம்பட்டினத்தில் பெண் ஒருவர் 10 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பவானிபுரத்தைச் சேர்ந்த ஷாஃபி என்பவர் கொலைக்கு முக்கிய காரணமானவராக காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட கல்யாணிக்கும் ஷாஃபிக்கும் இடையே இருந்த தனிப்பட்ட தொடர்பும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறும் கொலைக்கான பின்னணியாக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனை மையமாக வைத்து ஏற்பட்ட தகராறு
கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு கல்யாணி தனது மகனை ஷாஃபியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறுவனை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும், தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஷாஃபியிடம் கல்யாணி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தொடர் தகராறே கொலைக்கு வழிவகுத்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத்தை காவுவாகும் கள்ளக்காதல்..! வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்ட கிடந்த பெண்! அம்பலமான அதிர்ச்சி உண்மை... பரிதவிக்கும் 3 பிஞ்சுகள்!!!!
உடலை துண்டித்து கால்வாய்களில் வீச்சு
சுமார் 10 நாட்களுக்கு முன்பே கல்யாணி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு தடயங்களை மறைக்கும் நோக்கில் அவரது உடலை 10 துண்டுகளாக வெட்டி, அருகிலுள்ள கால்வாய்களில் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
காவல் துறை விசாரணை தீவிரம்
இப்ராஹிம்பட்டினம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஷாஃபியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடம், உடல் பாகங்கள் வீசப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கல்யாணி கொலை வழக்கு தொடர்பான முழு பின்னணியையும் வெளிக்கொண்டு வர காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.