நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்! வெறும் 180 நிமிடங்களில் 40 ஆண்கள் அத்துமீறல்.! அடுத்த நடந்த அதிரடி டுவிஸ்ட்டால் தலை தெறித்து ஓடிய கும்பல் !!!
ஹைதராபாத்தில் பெண்கள் பாதுகாப்பை சோதிக்க ஷீ டீம் பெண் காவலர் நள்ளிரவில் அண்டர்கவர் நடவடிக்கையில் ஈடுபட்டார். 3 மணி நேரத்தில் 40 பேர் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் நகரில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நேரடியாகச் சோதிக்க காவல்துறை நடத்திய அண்டர்கவர் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷீ டீம் பிரிவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், நள்ளிரவில் பொதுமக்கள் போல களமிறங்கி கண்காணிப்பில் ஈடுபட்டார். வெறும் மூன்று மணி நேரத்தில் 40 பேர் தொல்லை கொடுத்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஹைதராபாத் காவல்துறையின் ஷீ டீம் பிரிவில் பணியாற்றும் பெண் காவலர் சுமதி, சாதாரண உடையில் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டார். பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் இரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை அவர் தனியாக நின்று நிலைமையை கவனித்தார்.
இதையும் படிங்க: மூன்று பெண்களுடன் காதல் சில்மிஷம்! ஆகாஷ் ஆபாச வீடியோவை காட்டி பெண்களை மிரட்ட.... பெண்களின் துணிச்சல் செயல்!
மூன்று மணி நேரத்தில் 40 பேர் தொல்லை
தகவலின்படி, சுமார் 180 நிமிடங்களில் 40 ஆண்கள் சுமதியை அணுகி பல்வேறு விதங்களில் அத்துமீறியுள்ளனர். ஆபாசமாக பேசுதல், கேலி செய்தல், பின்தொடர்தல், வற்புறுத்தி வாகனத்தில் ஏற்ற முயற்சித்தல் போன்ற செயல்கள் பதிவாகியுள்ளன.
ஒரு பெண் காவலர் என்பதை அறியாமலேயே பலர் இவ்வாறு நடந்துகொண்டது காவல்துறையினரையே அதிர்ச்சியடைய வைத்ததாக கூறப்படுகிறது.
மறைந்திருந்து கண்காணித்த அதிகாரிகள்
சுமதியுடன் மறைமுகமாகக் கண்காணிப்பில் இருந்த மற்ற Hyderabad Police அதிகாரிகள், அத்துமீறிய நபர்களை உடனுக்குடன் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் இதில் இருப்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பிடிபட்டவர்கள்மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடும்பத்தினருக்கு எச்சரிக்கை
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் காவல்துறை அழைத்து எச்சரிக்கை வழங்கியது. பெண்களிடம் பொதுவெளியில் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அதிகாரிகள் வலியுறுத்தினர். சிலருக்கு கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத் காவல்துறையின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றாலும், பெண்கள் இரவு நேரத்தில் இன்னும் பாதுகாப்பாக உணர முடியாத சூழல் தொடர்கிறது என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.