நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்து காவலர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி... நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!!
ஹைதராபாத் மூசாராம்பாக் பகுதியில் போலீஸ் காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் முடிவுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் மூசாராம்பாக் பகுதியில் போலீஸ் காவலர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் இளம்பெண் ஒருவருக்கு அவர் வீடியோ கால் செய்திருந்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்த காவலர்
சாலிவாஹன நகரைச் சேர்ந்த முட்டே சந்திரசேகர் (35), ஆம்பர்ஸ்பேட் தலைமையகத்தில் காவலர் எழுத்தாளராக பணியாற்றி வந்தார். நள்ளிரவில் இளம்பெண் ஒருவருக்கு அவர் வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, தான் விபரீத முடிவு எடுக்கப் போவதாக அந்தப் பெண்ணிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அது பொண்ணா? இல்ல பொம்மையா... இப்படி பண்றாரு! பெண்ணை அடித்து முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற போலீஸ்காரர்...!அதிர்ச்சி வீடியோ..!!!
தகவல் கிடைத்ததும் போலீஸாருக்கு அவசர தகவல்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக சைதன்யபுரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சைதன்யபுரி போலீஸார் தகவலை மால்காஜ்கிரி போலீஸாருக்கு உடனடியாக தெரிவித்தனர். இதையடுத்து மால்காஜ்கிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை
போலீஸார் அங்கு செல்வதற்குள் சந்திரசேகர் உயிரிழந்திருந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை மீட்ட போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். நள்ளிரவில் அவர் தொடர்பு கொண்ட இளம்பெண் யார், அவர்களுக்குள் என்ன தொடர்பு இருந்தது என்பதையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் குடும்பப் பிரச்சனை, பணிச்சுமை உள்ளிட்ட ஏதேனும் காரணங்கள் இருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர் சந்திரசேகர் உயிரிழப்பு தொடர்பாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது முடிவுக்கான முழுமையான பின்னணியை கண்டறிய போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.