×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓயோ விடுதியில் அறை எண் 103 இல் சடலமாகக் கிடந்த இளம்பெண்..! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...! சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீஸ்..!!!

ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் ஓயோ விடுதி அறையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடன் தங்கியிருந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் உள்ள ‘கோகுல் பிரைட்’ ஓயோ விடுதியில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறை எண் 103-ல் சி. கணேஷ் என்ற இளைஞருடன் அவர் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுநாள் காலை பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவருடன் தங்கியிருந்த கணேஷ் தலைமறைவாகியுள்ளார்.

ஓயோ அறையில் சடலமாக மீட்பு

எஸ்.ஆர். நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘கோகுல் பிரைட்’ விடுதிக்கு கணேஷ் மற்றும் இளம்பெண் இருவரும் வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அறை எண் 103-ல் தங்கியிருந்த நிலையில், மறுநாள் காலை அந்த அறையில் பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பிரம்மாண்ட மலைப்பாம்புடன் குத்தாட்டம் போட்ட பெண்....! உடனே போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை... ஷாக் வீடியோ..!!!

ஆதார் அட்டையில் ஒரு பெயர்; மருத்துவ பதிவில் வேறு பெயர்

உயிரிழந்த பெண்ணின் ஆதார் அட்டையில் அவரது பெயர் ‘துர்கா’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ‘சிரீஷா’ என்ற பெயரில் அவர் பதிவு செய்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவர் தாக்கியதாக கூறி அவர் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்

பெண்ணின் மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவருடன் அறையில் தங்கியிருந்த கணேஷ் தற்போது தலைமறைவாக இருப்பதால், அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விடுதியின் CCTV காட்சிகள், தங்கும் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் பெண்ணின் சந்தேக மரணம் தொடர்பான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: கண்ணே கலங்குது... நடுரோட்டில் பிஞ்சு குழந்தைகள் படும் அவஸ்தையை பாருங்க! பெத்தவுங்களே இப்படி பண்ணலாமா? நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹைதராபாத் பெண் மரணம் #OYO Hotel Death #எஸ்.ஆர். நகர் #துர்கா சிரீஷா #Hyderabad Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story