மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்... கணவன் வீட்டின் முன் அடக்கம் செய்யப்பட்ட உடல்..!!
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்... கணவன் வீட்டின் முன் அடக்கம் செய்யப்பட்ட உடல்..!!
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன். கட்டிட காண்டிராக்டரான இவர் தற்போது மாங்கரையில் வசித்து வருகிறார்.
இவரது மகள் ஜெனிலா ஜோபி (23). இவருக்கும், கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் வசித்து வரும் சேம் மரியதாஸ் என்பவருக்கும் எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சேம் மரியதாஸ் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஜெனிலா கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்நிலையில் சேம் மரியதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஜெனிலா ஜோபியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து டோடா பல்லாப்பூர் காவல்துறையினர் சேம் மரியதாஸை கைது செய்தனர்.
ஜெனிலா ஜோபியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெனிலா கோபியின் உடல் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு ஜெனிலா ஜோபியின் உடல் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஜெனிலா ஜோபியின் உடலை அவரது பெற்றோர் வீட்டில் புதைக்காமல், கருங்கல் எட்டணி பகுதியில் இருக்கும் அவரது கணவர் சேம் மரியதாசுக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக ஜெனிலா ஜோபியின் உடல் மாங்கரையில் இருந்து நேற்று அங்கு கொண்டு வரப்பட்டது. அந்த வீட்டில் தற்போது சேம் மரியதாசின் பாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெனிலா ஜோபியின் உடலை புதைக்க அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
உறவினர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் சம்மதித்தார். இந்நிலையில், கொலை செய்த கணவரின் வீட்டின் முன் உடலை புதைக்க பள்ளம் தோண்டப்பட்டு ஜெனிலா ஜோபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க கருங்கல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.