×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்து: தம்பியுடன் உல்லாசத்துக்கு வற்புறுத்திய கணவனால் அதிர்ச்சியடைந்த பெண்..!

மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்து: தம்பியுடன் உல்லாசத்துக்கு வற்புறுத்திய கணவனால் அதிர்ச்சியடைந்த பெண்..!

Advertisement

கேரள மாநிலத்தில் சமீபத்தில் மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து நடந்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் இது போன்ற சம்பவம் டெல்லியில் நடந்ததுள்ளது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் குர்காம் பகுதியை சேர்ந்தவர் அந்த தொழில் அதிபர். இவரது மனைவிக்கு 30 வயதாகிறது. டெல்லியில் அடிக்கடி நடக்கும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்து குறித்து கேள்விப்பட்ட அவர் தானும் தனது மனைவியுடன் கலந்து கொள்ள ஆசை கொண்டார். இது குறித்து தனது மனைவியிடம் தெரிவிக்க, அவர் இவரது திட்டத்துக்கு உடன்படவில்லை என்று தெரிகிறது.

இதன் பின்பு, அந்த தொழில் அதிபர் தனது இளம் மனைவியை மிரட்டி வலுக்கட்டாயமாக அந்த விருந்துக்கு அழைத்து சென்றுள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனாலும் மனைவியை மிரட்டி தொடர்ச்சியாக இந்த விருந்தில் பங்கேற்க வைத்துள்ளார்.

சம்பவத்தன்று அதே விருந்தில் கலந்து கொண்ட  அவரது தம்பியுடன் உல்லாசம் அனுபவிக்குமாறு மனைவியை வற்புறுத்தி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இதற்கு உடன்பட மறுத்ததால், அவரை உடல் ரீதியாக சித்ரவதை செய்துள்ள. இந்த வக்கிரத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அங்கிருந்து தப்பிய பெண் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் அவர் கூறி இருப்பதாவது, எனது கணவர் என்னை கட்டாயப்படுத்தி டெல்லியில் நடந்த மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு அழைத்து சென்றார். இதற்கு நான் உடன்படாததால் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் கொடுமை படுத்தினார். இடையில் ஒருநாள் நான் காவல் நிலையத்திக் புகாரளிக்க வந்தேன்.

இதனை அறிறிந்த எனது கணவர் குண்டர்களுடன் என்னை வழிமறித்து இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். மேலும் நான் மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #Sexual Harassment #New Delhi #Swap Wives Party #KERALA
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story