மனைவியின் போலீஸ் சீருடையை திருடி கணவன் செய்த காரியம்! அதிர்ச்சி சம்பவம்!
husband theft wife's police uniform

மனைவியின் போலீஸ் சீருடையை திருடி காதலியுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர ராய் என்பவரின் மனைவி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஜிதேந்திர ராயின் மனைவி, தன்னுடைய கணவன் வீட்டில் இருந்து வெளியேறி சங்கீதா என்கிற பெண்ணுடன் வசித்து வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜிதேந்திர ராய் தன்னுடைய மனைவியின் போலீஸ் சீருடையை திருடி சங்கீதாவிற்கு கொடுத்துள்ளார். மேலும், போலியான அடையாள அட்டை தயார் செய்து காதலியுடன் சேர்ந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈட்டுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது
இந்த நிலையில் ஜிதேந்திர ராய் மற்றும் சங்கீத இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.