×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாக்குவாதம் கொலையா முடிந்துட்டு... ஓடும் காரிலே அலறிய மனைவி! கழுத்தை நெரித்து கொன்று கணவன் ஆடிய நாடகம்! தவிக்கும் பிஞ்சுகள்....!!!

ஆந்திராவின் கம்மம் அருகே கள்ள உறவு சந்தேகத்தில் மனைவியை காருக்குள் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் கள்ள உறவு சந்தேகத்தில் மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவியை கொன்ற பிறகு நாடகமாடிய கணவரை ரகுநாதபாலம் போலீசார் கைது செய்தனர்.

காருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது

கம்மம் பகுதியைச் சேர்ந்த வித்யா சாகர், தனது மனைவி ரேணுகாவுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். ரகுநாதபாலம் பகுதி அருகே சென்றபோது இருவருக்கும் இடையே கள்ள உறவு சந்தேகம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குடும்ப எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… இறுதியில் கெஸ்ட் ஹவுஸில் சோக முடிவு!

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வித்யா சாகர், காருக்குள்ளேயே ரேணுகாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உறவினர்களிடம் நாடகமாடிய கணவர்

மனைவியை கொன்ற பிறகு வித்யா சாகர் தனது உறவினர்களை தொடர்புகொண்டு, தான் இறந்துகொண்டிருப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் ரகுநாதபாலம் போலீசார் விரைந்து சென்று, பிரகதி பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை கண்டுபிடித்தனர். அங்கு இருந்த வித்யா சாகரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தைகள் ஆதரவின்றி தவிப்பு

ரேணுகாவின் உயிரிழப்பால் அவரது குழந்தைகள் தற்போது தாயை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொலைக்கான முழுமையான காரணம், தம்பதியினரிடையே ஏற்கனவே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சிசிடிவி வைத்ததால் அதிருப்தி.. மாமனாரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மருமகள்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கம்மம் கொலை #Khammam Murder #கள்ள உறவு சந்தேகம் #ரேணுகா கொலை #Raghunathapalem Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story