மனைவியின் நடத்தையில் சந்தேகம்!. இப்படியா சோதனை செய்வது!.
husband get doubt on his wife

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் எனக் கூறி அவரது கணவர் வீட்டார் அப்பெண்ணை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த மந்திரவாதி, சினிமாவில் போல எரியும் நெருப்பில் பெண்ணின் கையை வைக்க கூறியுள்ளார். மேலும் உண்மை சொல்பவர்களுக்கு இந்த நெருப்பு சுடாது எனவும், பொய் சொல்பவர்களுக்கு நெருப்பு சுடும் எனவும் கூறியுள்ளார்.
முதலில் நெருப்பை நோக்கி கை வைத்த கணவர், சில நொடிகளில் கையை எடுத்துள்ளார். அவரது மனைவி கைவைத்தபோது, கையை நெருப்பிலிருந்து அகற்றாமல் கணவர் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார்.
கற்பை நிரூபிக்க நெருப்பில் நீண்ட நேரம் வலுக்கட்டாயமாக கையை வைத்திருந்த பெண்ணின் கைது வெந்து போனது. இந்த பெண்ணின் புகைப்படம் வெளியானதை அடுத்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.