வீட்டில் யாரும் இல்லை.. இங்க வர்றீங்களா? திருமணமான பெண் விடுத்த அழைப்பு..! ஆசையாக சென்ற நபருக்கு நேர்ந்த பயங்கரம்!
Husband and wife killed chennai man at siththoor

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி மாதேஸ்வரி. இருவரும் வேலை தேடி சென்னைக்கு வந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்த வாலிபர் கார்த்திகேயன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில், மாதேஸ்வரியின் அந்தரங்க விஷயங்களை கார்த்திகேயன் வீடியோ எடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு அவரை மிரட்டியுள்ளார். சில நாட்களில் சிவகுமார், மாதேஸ்வரி இருவரும் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கே சென்றுள்ளனர். அப்படி இருந்தும் கார்த்திகேயன் விடுவதாக இல்லை.
தொடர்ந்து மாதேஸ்வரியை மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து தனது கணவனிடம் மாதேஸ்வரி கூற, கார்த்திகேயனுக்கு போன் செய்து, இங்கே வருமாறு கூப்பிட்டு என கூறியுள்ளார். மாதேஸ்வரி கூப்பிட்டதை நம்பி ஆசை ஆசையாக கார்த்திகேயன் சித்தூர் சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் அங்கு மறைந்திருந்த சிவகுமார் மண் வெட்டியால் கார்த்திகேயனின் தலையில் அடித்து கொலை செய்து, வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். கார்த்திகேயனை காணவில்லை என்ற புகாரை அடுத்து, கார்த்திகேயனின் செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகளை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
இதில் சிவகுமாரும், மாதேஸ்வரியும் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.