தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகில் மிகவும் அழகான ஆண் என்ற பட்டத்தை வென்ற இந்திய திரைப்பட நடிகர்! ரசிகர்கள் உற்சாகம்

hrithik roshan named as most handsome man in world

hrithik roshan named as most handsome man in world Advertisement

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகில் சிறந்த அழகான ஆண் (The most Handsome man) யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் ஏராளமான மக்கள்  கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்த வாக்குகளின் அடிப்படையில், இந்திய பாலிவுட் நடிகர்  ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இப்போட்டியில் பிரபல ஹொலிவுட் நடிகர்களான கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் பேட்டின்சன், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்கள் பலரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றுள்ளார் ஹிருத்திக் ரோஷன். இதனால் மிகவும் உற்சாகத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

most handsome man

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஹிருதிக் ரோஷன், இதற்கெல்லாம் காரணம் 'ப்ரோக்கோலி'யின் மகிமை தான் என்று கிண்டல் செய்துள்ளார், அதன் பிறகு சும்மா நான் கேலிக்காக தான் கூறினேன் என்ற அவர் பட்டத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 

ஆனால் உண்மையில் ஒரு பெரிய  சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை, இந்த  உலகில் ஒருவர் விரும்பும் மற்றும் மதிக்க வேண்டிய ஏதாவது இருந்தால், அது அவர்களின் தன்மையே ஆகும். உங்களின் நல்ல குணம் எப்போதும் உங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் என கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#most handsome man #hrithik roshan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story