×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாலியல் கொலைகளில் இருந்து பெண்கள் தப்பிக்க ஈஸி வழிகள்!! இதை செய்தாலே போதும்!!!

How to prevent from rape detail in Tamil

Advertisement

டெல்லி நிர்பயா கொலை, ஹைதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா கொலை இப்படி எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடூர கொலைகளால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அச்சத்துடனே இருக்க வேண்டி உள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களால் பெண்களும் பயத்திலேயே வெளியே செல்லவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சரி, இதுக்கு என்னதான் தீர்வு? இதுபோன்ற சமயங்களில் பெண்கள் என்ன செய்யவேண்டும்? எப்படி அவர்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்? வாங்க பாக்கலாம்.

1 . பெண்கள் வெளியே செல்லும்போது எங்கே செல்கிறோம், யாருடன் செல்கிறோம், எப்போது திரும்பி வருவோம் என்பதை பெற்றோர் அல்லது உறவினர்கள், நண்பர்களிடம் கட்டாயம் தெரிவிக்கவேண்டும்.

2 . முடிந்தால் நீங்கள் இருக்கும் லொக்கேஷனை உங்கள் பெற்றோருக்கு அனுப்புவதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

3 . ஒருவேளை டாக்சி, ஆட்டோ அல்லது வேறு ஏதேனும் வாகனங்களில் செல்லும்போது வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனரின் அடையாள அட்டை இவற்றை புகைப்படமாக எடுத்து உங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அனுப்பிவையுங்கள்.

4 . நீங்கள் செல்லும் பாதை சந்தேகப்படும் படி இருந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி அந்த பகுதியில் இருப்பவர்களிடம் நீங்கள் செல்லும் பாதை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

5 . தனியமையா பகுதியிலோ அல்லது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியிலோ நிற்பதை தவிர்த்து கூட்டமான பகுதிகளில் காத்திருங்கள். ஒருவேளை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அந்த பகுதியில் செல்லும் போலீஸ் வாகனத்தை நிறுத்தி தயங்காமல் உதவி கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்யவே அவர்கள் காத்திருக்கிறார்கள்.

6 . நீங்கள் இருக்கும் பகுதி சந்தேகப்படும் படியோ அல்லது வேறு யாரும் அந்த பகுதியில் இல்லையெனில் உடனே அருகில் இருக்கும் கடை, வீடு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.

7 . எந்த ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தாலும் தயங்காமல் 100  (காவல் உதவி எண்) க்கு கால் செய்ய தயங்காதீர்கள்.

8 . சந்தேகம் அல்லது பயமாக இருந்தால் உங்கள் அருகில் இருக்கும் நம்பிக்கையான நபர்களிடம் உதவி கேளுங்கள்.

9 . உங்களை யாரேனும் கண்காணிப்பதுபோல் தோன்றினாலோ அல்லது உங்கள் அருகில் யாரேனும் சந்தேகப்படும் படி இருந்தாலோ உடனே உங்கள் தொலைபேசியை எடுத்து உங்களுக்கு தெரிந்த காவல்துறை அதிகாரியிடம் பேசுவதுபோல் பாவனை செய்யுங்கள். மேலும், உங்கள் நிலை குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இது உங்கள் அருகில் இருக்கும் சந்தேக நபர்களை அச்சுறுத்த உதவும்.

10 . நீங்கள் ஆபத்தாக உணரும் சமயத்தில் உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். தைரியமாக பேசுங்கள். உதவி வேண்டும் என சத்தம் போட்டு கத்துங்கள். இது உங்கள் எதிரியை நடுநடுங்க செய்யும்.

11 . ஒருவேளை உங்களால் சமாளிக்கமுடியவில்லை என்றால் உதவி கேட்டு கத்திகொண்டே அங்கிருந்து மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை நோக்கி ஓடுங்கள்.

12 . உங்கள் பகுதியில் ஏதேனும் சந்தேகப்படும்படி விஷயங்கள் நடந்தால் உடனே உங்கள் பகுதி காவல் நிலையத்திற்கு தயங்காமல் தகவல் கொடுங்கள்.

13 . ஒருவேளை நீங்கள் இருக்கும் பகுதி, அருகில் இருக்கும் நபர் குறித்து சந்தேகம் இருந்தால் உடனே புகைப்படம் எடுத்து 9490616555 என்ற எண்ணிற்கு வாட்ஸப்பில் அனுப்பி வையுங்கள். காவல்துறை அந்த புகைப்படத்தை ஆராய்ந்து உங்களுக்கு பதில் அனுப்பும்.

தயவு செய்து இந்த பதிவை முடிந்தவரை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்த பெண்கள் அனைவர்க்கும் அனுப்பி வையுங்கள். ஆபத்து காலத்தில் கட்டாயம் அவர்களுக்கு உதவும்.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Priyanka murder case #Priyanka murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story