கொரோனாவால் உயிரிழந்த இளம்பெண்.! மருத்துவமனையில் உறவினர்களுடன் கணவர் செய்த காரியம்.! அதிர்ச்சி வீடியோ.!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கபட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அந்த மருத்துவமனையை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். சி.சி.டி.வி.யில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தநிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையின் அலட்சிய போக்கே பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், மேலும் பெண்ணின் உடலை தராமல் ரூ.1.5 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.